ராகி கூழ் - Ragi Koozh Recipe - Kezhvaragu koozh- Summer Special Recipe /Millet Recipes

இந்த கூழ், பெரும்பாலும் அனைவரும் சிறிய வயதில் கண்டிப்பாக குடித்து இருப்போம்... கூழ் மிகவும் சத்தான உணவு..உடலிற்கு மிகவும் நல்லது...

கூழினை நொய் அரிசியினை போட்டு செய்வாங்க....நொய் அரிசிக்கு பதில் அரிசியினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

கேழ்வரகு மாவினை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து அதனை 1 நாள் வரை புளிக்கவிடவும். மாவு புளித்த பிறகு சாதம் (வேகவைத்த அரிசியுடன்) அந்த மாவுடன் தண்ணீர் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும். மாவு வெந்ததும் அதனை அப்படியே 1 நாள் வைத்து இருந்து மறுநாள் தயிர், வெங்காயம் , தண்ணீர் சேர்த்து கரைத்து குடிக்கவும்.
இதே மாதிரி பார்லியில் செய்த கூழ் பார்க்க இங்கே பார்க்கவும்...நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


சமைக்க தேவைப்படும் நேரம் : 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
  .  கேழ்வரகு மாவு - 1 கப்
  .  அரிசி - 1 கப்
  .  உப்பு - தேவையான அளவு

கூழ் கரைக்கும் பொழுது :
  .  வெங்காயம் - 1 பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  .  தயிர் - 1 கப்
  .  தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : 
 கேழ்வரகு மாவினை 3 கப் தண்ணீர் + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இந்த மாவினை அப்படியே 12 மணி நேரம் -  1 நாள் வரை வைத்து புளிக்கவிடவும்.
  .
அரிசியினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். அரிசியினை கழுவி அதனை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 - 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


.  பிரஸர் குக்கர் அடங்கியதும், முதல் நாள் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவை + 2  - 3 கப் தண்ணீர்யினை இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்.

  .  சுமார் 12 - 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.

  .  இப்பொழுது கூழ் ரெடி. இதனை அபப்டியே குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்துவிடவும். அதனை மறுநாள் காலை அல்லது மதியம் கூழினை கரைத்து கொள்ளவும்.

  .  கூழ் கரைக்கும் பொழுது 1 பெரிய உருண்டை கூழ் + பொடியாக நறுக்கிய வெங்காயம் + தயிர் + 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கூழினை கரைத்து கொள்ளவும்.

  .  இப்பொழுது சத்தான கூழ் ரெடி. இத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் கடித்து குடித்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.



No comments:

Post a Comment