பேக்ட் சிக்கன் சமோசா - Baked Chicken Samosa - Kids Fast Food Special - Friendship 5 Series


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Samosa Sheets - 10
  .  எண்ணெய் - சிறிதளவு

சமோசா மசாலா செய்ய :
  .  சிக்கன் (Boneless skinless Chicken Breast) - 1
  .  வெங்காயம் - பாதி
  .  பச்சைமிளகாய் - 2
  .  கருவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
.  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.மிக்ஸியில் வெங்காயம் + பச்சைமிளகாய் + சிக்கன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
(கவனிக்க : விரும்பினால் Minced Meatயிலும் செய்யலாம். நான் எப்பொழுதுமே சிக்கன் Breastயில் செய்வது. )

.  கடாயில் என்ணெய் ஊற்றி சூடனாதும், கருவேப்பில்லை + பிரியாணி மசாலா சேர்த்து கொள்ளவும்.
.  இத்துடன் அரைத்த சிக்கன் + மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

.  சிக்கன் நன்றாக வதங்கிய பிறகு கடைசியில் கொத்தமல்லி தூவி சிறிது நேரம் ஆறவிடவும். இப்பொழுது Samosa Stuffing ரெடி.
.  Ovenயினை 400Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். சமோசா Sheetsயில் 1 மேஜை கரண்டி சிக்கன் கலவையினை வைத்து சமோசாவினை மடிக்கவும்.

.  இதே மாதிரி அனைத்து சமோசாவினையும் செய்து வைத்து கொள்ளவும். 
(குறிப்பு : இதனை அப்படியே Freeze செய்து வைத்து கொண்டால் விரும்பிய நேரம் எண்ணெயில் பொரித்தோ அல்லது Bake செய்தே சாப்பிடலாம். )
.  சமோசாவினை அவனில் வைக்கும் ட்ரேயில் வைத்து அதன் மீது சிறிது எண்ணெயினை தடவி /spray செய்துவிடவும்.

.  சமோசா ட்ரேயினை மூற்சூடு செய்த அவனில் வைத்து 400Fயில் சுமார் 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

.  ஒரு பக்கம் நன்றாக் வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 4 - 5 நிமிடங்கள் வேகவிடவும்.

.  சுவையான எளிதில் செய்ய கூடிய சமோசா ரெடி.
குறிப்பு :
.  அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல குழந்தைகளில் சுவைக்கு ஏற்ப அவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

.  சிக்கனிற்கு பதிலாக காய்கள் - உருளைகிழங்கு, பீன்ஸ், பட்டாணி , காரட் சேர்த்து செய்யலாம்.

.  இதனை Bake செய்யாமல் எண்ணெயில் பொரித்து கொடுக்கலாம்.

.  Stuffing ரெடியாக இருந்தால் எளிதில் செய்து விடலாம்.

பள்ளிபாளையம் சிக்கன் - Pallipalayam Chicken - Chicken Recipes

மிகவும் குறைந்த பொருட்களுடன் செய்ய கூடிய ஈஸியான சிக்கன் வறுவல். இதன் Specialயே இதனை காய்ந்த மிளகாயில் தாளிப்பது தான்.

காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல மிளகாயினை சேர்க்கவும்.

இதற்கு குண்டு மிளகாயிற்கு பதிலாக நீட்டு மிளகாய் பயன்படுத்தலாம்... சின்ன வெங்காயம் தான் பயன்படுத்துவாங்க...அதற்கு பதில் பெரிய வெங்காயம் கூட பயன்படுத்தலாம், ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் இருக்கும். 

பொதுவாக இதில் எந்த வித மசாலா தூள்களும் சேர்க்க மாட்டாங்க வெரும் மிளகாய் தூள் தான் சேர்ப்பாங்க ...ஆனால் நான் இதில் சிறிது சிக்கன் மசாலா சேர்த்து இருக்கின்றேன். 

அதே மாதிரி அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் மாதிரி தேங்காயினை சிறிய பல் துண்டுகள் மாதிரியே அல்லது துறுவியே சேர்த்து கொள்ளலாம்.

கடைசியில் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால் நன்றாக இருக்கும். இதே மாதிரி மட்டனில் செய்தாலும் ரொம்ப நன்றாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Boneless Skinless சிக்கன் - 1/4 கிலோ
  .  சின்ன வெங்காயம் - 10 - 12
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  தேங்காய் துறுவல் - 3 மேஜை கரண்டி (1/4 கப்யிற்கும் குறைவாக)
  .  கொத்தமல்லி - கடைசியில் தூவ

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
  .  காய்ந்த மிளகாய் - 5 - 6
  .  பூண்டு - 4 பல் நசுக்கியது

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  சிக்கன் மசாலா - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
.   சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

.   காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
(கவனிக்க : காரம் விரும்புவர்கள் அதிகம் விதைகள் நீக்க தேவையில்லை.)

.   கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
.   வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அத்துடன் சிக்கன் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து(சுமார் 2 மேஜை கரண்டி அளவு) அதனை தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

.   தேங்காயினை துறுவி கொள்ளவும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு துறுவிய தேங்காயினை இதில் சேர்த்து கிளறி மேலும் 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.
 கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி விடவும். 
.   சுவையான சிக்கன் ரெடி. இதனை அப்படியே சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். கலந்த சாதம், சாம்பார், ரசம் போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
 
 

சாக்கலேட் - Homemade Chocolate Recipe using Milk powder - Kids Special

 எளிதில் செய்ய கூடிய சாக்கலேட்... என்னுடைய தோழி Srividhya வீட்டில் தான் இதனை முதன்முதலாக சாப்பிட்டேன்..Coffee Bite Tasteயில் இருக்கும். அப்பறம் அம்மா, அவங்க அம்மாவிடன் Recipeயினை கேட்டு செய்தாங்க...சுமார் 20 வருடங்களுக்கும் மேலகாக எங்கள் வீட்டில் செய்யும் ஸ்வீட் இது.... எந்த ஒரு விசேஷம் என்றாலும் அம்மா உடனே செய்யும் recipe .இதனை 10 நிமிடங்களில் செய்துவிடலாம்..

இதில் முக்கியமாக தேவைப்படும் பொருள் பால் பவுடர், Cocoa Powder மற்றும் Butter.

நான் இதில் கொடுத்துள்ள Cocoa Powderயின் அளவில் செய்தால் Normal Chocolate Flavorயில் இருக்கும். Dark chocolate flavorயில் இருக்க விரும்பினால் Cocoa powderயின அளவினை 1 கப் + Milk Powder 1 & 1/2கப் என்று சேர்த்து கொள்ளவும்.

ஒவ்வொரு Brand , Milk powder & Cocoa Powderயினை பொருத்து Chocolateயின் சுவை இருக்கும்.நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.
 சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் பவுடர் - 2 கப்
  .  Cocoa powder - 1/2 கப்
  .  வெண்ணெய் - 1/2 கப் ( 1 stick of Butter about 4 oz )
  .  சக்கரை - 1 கப்
  .  தண்ணீர் - 3/4 கப்

செய்முறை :
  .  பால் பவுடர் + Cocoa Powder இரண்டியினையும் கலந்து சலித்து கொள்ளவும். (கவனிக்க : இப்படி சலிபப்தால் இரண்டும் நன்றாக கலந்துவிடும்.)
 கடாயில் சக்கரை + தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும். (கவனிக்க : கண்டிப்பாக பாகு வரும் வரை கொதிக்கவிடவும். )
  .  பாகு வந்த பிறகு அதில் Room Temperature வெண்ணெயினை போட்டு அதனையும் சேர்த்து நன்றாக 1 - 2 நிமிடம் கலந்துவிடவும்.
   .  வெண்ணெய் நன்றாக உருகியதும், அதில் சலித்த பால்பவுடரினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். (உடனே பால்பவுடரினை சேர்த்து கிளற வேண்டும் என்பதால் photo எடுக்கமுடியவில்லை...)

  .  ஒரு தட்டில் வெண்ணெயினை தடவி கொள்ளவும். அதில் கிளறிய கலவையினை கொட்டி சமபடுத்தவும்.

  .  5 நிமிடங்கள் கழித்து சிறிது ஆறியதும் , விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

   .  எளிதில் செய்ய கூடிய சாக்கலேட் ரெடி.

கொண்டைக்கடலை பிரியாணி / சென்னா பிரியாணி - Chana Biryani / Chana Pulao Recipe - Chickpeas Biryani Recipes

கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து மற்றும் Protein உள்ளது. இதில் Polyunsaturated Fat இருக்கின்றது. Cholesterolயினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.  நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சென்னா / கொண்டைக்கடலை - 1/2 கப்
  .  பாஸ்மதி அரிசி - 2 கப்
  .  தயிர் - 1/2 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது (நீளமாக வெட்டி கொள்ளவும்)
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  .  புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
  .  எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  பிரியாணி மசாலா - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
  .  பட்டை - 1 , கிராம்பு - 2, பிரியாணி இலை - 1

செய்முறை :
  .  1/2 கப் கொண்டைக்கடலை சுமார் 3 - 4 மணி நேரம் ஊறவைத்து கொண்டு அதனை பிரஸர் குக்கரில் போட்டு 4 - 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். 

. பிரஸர் குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
.  இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.

  .  பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 1 -2 நிமிடங்கள் வதக்கவும்.
. அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 

.  இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி + 4 கப் தண்ணீர்  சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிவந்தவுடன் பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும். 

 .  குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தே.கரண்டி நெய் + எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கிளறிவிடவும்.

 .  சுவையான சத்தான பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ராகி கூழ் - Ragi Koozh Recipe - Kezhvaragu koozh- Summer Special Recipe /Millet Recipes

இந்த கூழ், பெரும்பாலும் அனைவரும் சிறிய வயதில் கண்டிப்பாக குடித்து இருப்போம்... கூழ் மிகவும் சத்தான உணவு..உடலிற்கு மிகவும் நல்லது...

கூழினை நொய் அரிசியினை போட்டு செய்வாங்க....நொய் அரிசிக்கு பதில் அரிசியினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

கேழ்வரகு மாவினை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து அதனை 1 நாள் வரை புளிக்கவிடவும். மாவு புளித்த பிறகு சாதம் (வேகவைத்த அரிசியுடன்) அந்த மாவுடன் தண்ணீர் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும். மாவு வெந்ததும் அதனை அப்படியே 1 நாள் வைத்து இருந்து மறுநாள் தயிர், வெங்காயம் , தண்ணீர் சேர்த்து கரைத்து குடிக்கவும்.
இதே மாதிரி பார்லியில் செய்த கூழ் பார்க்க இங்கே பார்க்கவும்...நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


சமைக்க தேவைப்படும் நேரம் : 2 நாட்கள்
தேவையான பொருட்கள் :
  .  கேழ்வரகு மாவு - 1 கப்
  .  அரிசி - 1 கப்
  .  உப்பு - தேவையான அளவு

கூழ் கரைக்கும் பொழுது :
  .  வெங்காயம் - 1 பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  .  தயிர் - 1 கப்
  .  தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : 
 கேழ்வரகு மாவினை 3 கப் தண்ணீர் + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். இந்த மாவினை அப்படியே 12 மணி நேரம் -  1 நாள் வரை வைத்து புளிக்கவிடவும்.
  .
அரிசியினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். அரிசியினை கழுவி அதனை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 - 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


.  பிரஸர் குக்கர் அடங்கியதும், முதல் நாள் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவை + 2  - 3 கப் தண்ணீர்யினை இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்.

  .  சுமார் 12 - 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.

  .  இப்பொழுது கூழ் ரெடி. இதனை அபப்டியே குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்துவிடவும். அதனை மறுநாள் காலை அல்லது மதியம் கூழினை கரைத்து கொள்ளவும்.

  .  கூழ் கரைக்கும் பொழுது 1 பெரிய உருண்டை கூழ் + பொடியாக நறுக்கிய வெங்காயம் + தயிர் + 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கூழினை கரைத்து கொள்ளவும்.

  .  இப்பொழுது சத்தான கூழ் ரெடி. இத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் கடித்து குடித்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.



பப்பாளி பழம் சீஸ் சாலட் - Papaya Fruit & Cheese Salad Recipe - Fruit Salad



 புதினா இலையினை நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சை சாறு + புதினா + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
   .  இத்துடன் பப்பாளி பழம் + சீஸ் + புதினா கலவையினை சேர்த்து கலந்து பறிமாறவும்.

  .  எளிதில் செய்ய கூடிய சத்தான ப்ரூட் சாலட் .


கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம்பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம் !!

 

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
broasted-chicken
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி.