எட்டூருக்கு மணக்கும் மீன் குழம்பு!

தேவையான பொருள்கள்:

பொடிமீன் - 1 கிலோ

புளி - எலுமிச்சம் பழ உருண்டை அளவு

குழம்பு மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - 1/2 மூடி

எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் புளியைக் கரைத்து மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, சிவக்க வதக்க வேண்டும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிவந்த பிறகு, மீன்களைப் போட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து விழுதாக அரைக்கப்பட்ட தேங்காயைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் மணக்க மணக்க மீன் குழம்பு ரெடி!

முளைகட்டிய பயறு சாலட்



தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவைஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்புதேவையான அளவு.

செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.

பாகற்காய் அல்வா



தேவையானவை: பாகற்காய்கால் கிலோ, காய்ச்சிய பால்ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சைதலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய்தேவையான அளவு, எலுமிச்சைச் சாறுஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

முட்டைகோஸ் சூப்



தேவையானவை: முட்டைகோஸ்கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுதுதலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்புதேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பைசிம்மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.