பள்ளிபாளையம் சிக்கன் - Pallipalayam Chicken - Chicken Recipes

மிகவும் குறைந்த பொருட்களுடன் செய்ய கூடிய ஈஸியான சிக்கன் வறுவல். இதன் Specialயே இதனை காய்ந்த மிளகாயில் தாளிப்பது தான்.

காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல மிளகாயினை சேர்க்கவும்.

இதற்கு குண்டு மிளகாயிற்கு பதிலாக நீட்டு மிளகாய் பயன்படுத்தலாம்... சின்ன வெங்காயம் தான் பயன்படுத்துவாங்க...அதற்கு பதில் பெரிய வெங்காயம் கூட பயன்படுத்தலாம், ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் இருக்கும். 

பொதுவாக இதில் எந்த வித மசாலா தூள்களும் சேர்க்க மாட்டாங்க வெரும் மிளகாய் தூள் தான் சேர்ப்பாங்க ...ஆனால் நான் இதில் சிறிது சிக்கன் மசாலா சேர்த்து இருக்கின்றேன். 

அதே மாதிரி அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் மாதிரி தேங்காயினை சிறிய பல் துண்டுகள் மாதிரியே அல்லது துறுவியே சேர்த்து கொள்ளலாம்.

கடைசியில் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால் நன்றாக இருக்கும். இதே மாதிரி மட்டனில் செய்தாலும் ரொம்ப நன்றாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Boneless Skinless சிக்கன் - 1/4 கிலோ
  .  சின்ன வெங்காயம் - 10 - 12
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  தேங்காய் துறுவல் - 3 மேஜை கரண்டி (1/4 கப்யிற்கும் குறைவாக)
  .  கொத்தமல்லி - கடைசியில் தூவ

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
  .  காய்ந்த மிளகாய் - 5 - 6
  .  பூண்டு - 4 பல் நசுக்கியது

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  சிக்கன் மசாலா - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
.   சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

.   காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
(கவனிக்க : காரம் விரும்புவர்கள் அதிகம் விதைகள் நீக்க தேவையில்லை.)

.   கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
.   வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அத்துடன் சிக்கன் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து(சுமார் 2 மேஜை கரண்டி அளவு) அதனை தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

.   தேங்காயினை துறுவி கொள்ளவும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு துறுவிய தேங்காயினை இதில் சேர்த்து கிளறி மேலும் 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.
 கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி விடவும். 
.   சுவையான சிக்கன் ரெடி. இதனை அப்படியே சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். கலந்த சாதம், சாம்பார், ரசம் போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
 
 

No comments:

Post a Comment