தேவையானவை: ஆரஞ்சு
(உரித்து கொட்டை
நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை
முத்துக்கள் – கால்
கப்,
நறுக்கிய சிறிய
கொய்யா
– 1, திராட்சை – 20, பால் – ஒரு
கப்,
சுகர்
ஃப்ரீ
சர்க்கரை – தேவையான அளவு,
சேமியா
– 100 கிராம்.
செய்முறை: பழங்களை நன்கு
கழுவிக் கொள்ளவும். அவற்றை
மிக்ஸியில் போட்டு
அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற
வைத்த
பால்,
சுகர்
ஃப்ரீ
சர்க்கரை சேர்த்து நன்கு
கலந்து
தனியே
வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு,
கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக
வைத்து
இறக்கி,
ஜூஸ§டன் சேர்த்து நன்கு
கலந்தால், பழ
பாயசம்
ரெடி!
குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட்
சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள
இதனைச்
செய்து
சாப்பிடலாம்.
No comments:
Post a Comment